WE DO NOT KNOW HOW TO SAY OUR THANKS TO THE CONTRIBUTORS, WEBSITE ADMINISTRATORS, SATHGURUS FOR THEIR VALUABLE VIEWS, ADVICES, FOR THE UPLIFTMENT OF THE MANKIND IN THE WORLD

Sunday, October 2, 2011

வெற்றிக்கு வழி ஆன்மீகம்

வாழ்க்கை உலகில் பிறந்த ஜீவராசிகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வாழ்ந்துதான் தீரவேண்டும். இவ்வுலக வாழ்வு நமக்கு இன்பமானதாக அமைவதும் நமது வாழ்க்கை வெற்றிப் பாதையில் செல்வதும் நமது குறிக்கோள் என்ன? இங்கு நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்தே அமைகிறது. உலக வாழ்வில் பல இன்பங்களும் துன்பங்களும் பகலும் இரவும் மாறிமாறி வருவதுபோல் வருவது இயற்கை. இன்பம் வருகையில் மிகவும் மகிழ்ச்சியடைவதும் துன்பம் வருகையில் துவண்டுபோவதும் அவ்வின்ப துன்பங்களுக்கு நம்மை அடிமையாக்கும் விதமாக அமையும். இத்தகைய நிலையில் நாம் சுற்றுப்புற சூழ்நிலைகளால் ஆளப்பட்டு, நமது சுயக் கட்டுப்பாட்டை இழக்கிறோம். இந்நிலையை மாற்றி நம்மை நாமே ஆளும் தன்மையை நாமடைந்தால் சுற்றுப்புற சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாழ்வு நாம் விரும்புவதுபோல் அமையும். இடையில் வரும் எந்த இன்பங்களும் துன்பங்களும் நம்மை பாதிக்காமல் நாம் சலனமற்ற சிந்தையோடு இனிமையான வாழ்வு வாழ்வதுடன் முன்னேற்றப் பாதையில் நாம் தொடர்ந்து செல்வது உறுதி.
வாழ்வில் முன்னேறவும், வாழ்வை என்றும் இன்பகரமாக அமைத்துக்கொள்ளவும் நம் முன்னோர்கள், மற்றும் கல்வி அறிவும் அனுபமும் மிக்க அன்பர்கள் பலரும் உரிய வழிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள். அவற்றை அனைவரும் உணரும் வண்ணம் எடுத்துரைத்து, குழந்தைகள் மற்றும் அனைவரும் வாழ்வில் உயர வழிவகை செய்வதே நம் நோக்கம்.
 

ஆன்மீகக் கட்டுரைகள்

அறிவாற்றலும் அனுபவமும் மிக்க அன்பர்கள் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகளை
இங்கே காண்க http://www.mazhalaigal.com/philosophy/philosophy.html

ஞானியர் தம்மியல்

ஆன்மீக ஞானம் வளர வழிவகுத்த ஞானிகளைப்பற்றிய தகவலை
இங்கே காண்க http://www.mazhalaigal.com/philosophy/philosophers.html

வேத வித்துக்கள்

ஹிந்து வேதங்கள், புராணங்கள் மற்றும் மஹரிஷிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றிய விவரங்களை
இங்கே காண்க http://www.mazhalaigal.com/religion/mythology.html

பெற்றோரியல்

குழந்தைகளைத் திறமையும் அறிவும் நிறைந்தவர்களாகவும் ஒழுக்கசீலர்களாகவும் வளர்த்தல் பெற்றோரது தலையாய கடமை. இதனைத் திறம்பட ஆற்றப் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அவர்களுக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுக்க வேண்டும்? என்பன போன்ற இன்றியமையாத விவரங்களைப் பெற்றோர்கள் பலரது அனுபவபூர்வமான தகவல்களுடனும், உலகின் அனைத்து நாடுகளிலும் வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர் பெருமக்கள் பலரும் எடுத்துரைத்த கருத்துக்களைக் கொண்டும் தொகுத்து வழங்குகிறது மழலைகள் தளத்தின் பெற்றோறியல் பகுதியை
இங்கே காண்க  http://www.mazhalaigal.com/family/parenting.html

No comments:

Post a Comment