WE DO NOT KNOW HOW TO SAY OUR THANKS TO THE CONTRIBUTORS, WEBSITE ADMINISTRATORS, SATHGURUS FOR THEIR VALUABLE VIEWS, ADVICES, FOR THE UPLIFTMENT OF THE MANKIND IN THE WORLD

Sunday, October 2, 2011

மகாயோகி ஸ்ரீ அரவிந்தர்

 
                                          
                                              
                                                 அரவிந்த யோகி
 
ஸ்ரீ அரவிந்தர் பொன்மொழிகள்

எந்த எதிர்ப்பு இருந்தாலும், இறைவனின் சித்தப்படி நடக்க வேண்டியது எதுவோ அது நடந்தே தீரும். எனவே அச்சமற்றிரு.
ஒருவன் ஆசையில்லாமல் செயல்பட முடியும்; பறுதல் இல்லாமல் செயல்பட முடியும்; அகங்காரம் இல்லாமல் செயல் பட முடியும். தேவை உள்ள உறுதி மாத்திரமே.
நமக்குள் இருக்கும் இருளை முதலில் வெளியேற்றினால்தான், உண்மையான தெய்வீகத்தை முதலில் உணர முடியும்.
நடந்து முடிந்த ஒன்றைப் பற்றியும் நடக்கப் போவது ஒன்றைப் பற்றியும் சதா சிந்தித்துக் கொண்டிருப்பது வீண் முயற்சி. அது சோர்வையும் தளர்ச்சியையுமே தரும்.
நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல – எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கைவைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும், கஷ்டமும் போராட்டமுமே வெற்றியடைவதற்கான சாதனமாகிவிடும்
ஒருவன் செய்த தவறுக்கான பிராயச் சித்தம் என்பது தவறை ஒப்புக் கொள்வது மட்டுமல்ல. இனிமேலும் அத்தகைய தவறுகள் நிகழா வண்ணம் தெய்வ சித்தத்திற்கு தன்னை முழுமையாகத் திறந்து ஒப்படைத்தலே ஆகும்.
மாமிச உணவினால் வரும் இடர்பாடுகளை சைவ உணவு தவிர்க்கிறது. ஆனால், சைவ உணவினால் மட்டுமே புலனடக்கம் வந்து விடாது
எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் ஒன்று செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோகச் செயலாக ஆக்குகிறதே தவிர அந்தச் செயல் அல்ல. 
தேவையான ஒன்றின்மேல் முழுக் கவனம் செலுத்து, அதைக் கலைக்கும்படியான அல்லது உன்னை வழியைவிட்டு விலக்கும்படியான எல்லாக் கருத்துக்களையும் சக்திகளையும் ஒதுக்கித்தள்ளு.
ஒவ்வொரு உண்மையும்,  அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது. இதை உண்ர்ந்து நீ பொறுமையாக, உண்மையாக, நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

மகாயோகி அரவிந்தர்
 ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

No comments:

Post a Comment