WE DO NOT KNOW HOW TO SAY OUR THANKS TO THE CONTRIBUTORS, WEBSITE ADMINISTRATORS, SATHGURUS FOR THEIR VALUABLE VIEWS, ADVICES, FOR THE UPLIFTMENT OF THE MANKIND IN THE WORLD

Sunday, October 2, 2011

அறிவாளி விவேகானந்தர்


 
 
விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் தனது சுற்றுப்பயணத்தின் போது ஒருமுறை  மீரட்டில் தங்கியிருந்தார். ஜான் லுப்பக் என்பவர் எழுதிய நூல்களைப் படிக்க விரும்பினார். சக துறவியான அகண்டானந்தர் அவற்றை அருகில் உள்ள நூல் நிலையத்தில் இருந்து எடுத்து வந்து தந்தார். பெரிய தலையணை அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை  மறுநாளே திருப்பிக் கொடுத்து விட்டார் விவேகானந்தர். நூல் நிலையக் காப்பாளருக்கு ஒரே சந்தேகம். ”ஏன் உடனே திருப்பிக் கொடுக்கிறீர்கள், படிக்கவில்லையா என்ன?” என்று கேட்டார் அகண்டானந்தரிடம்.
அதற்கு அகண்டானந்தர், ”இல்லை. சுவாமி விவேகானந்தர் படித்து முடித்து விட்டார், அதனால் தான் திருப்பிக் கொடுக்க வந்தேன்” என்றார். ஆனால் நூலகக் காப்பாளர் அதனைநம்பவில்லை. அது சாத்தியமே இல்லை என்றும், இவ்வளவு பெரிய புத்தகத்தை ஒரே நாளில் யாராலும் படிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.
அகண்டானந்தர்
நடந்த விஷயத்தை விவேகானந்தரிடம் தெரிவித்தார் அகண்டானந்தர். உடனே விவேகானந்தர், அகண்டானந்தருடன் புறப்பட்டு நூலகத்தை அடைந்தார். காப்பாளரிடம் தான் அந்தப் புத்தகத்தை முழுக்கப் படித்து முடித்து விட்டதாகவும், வேண்டுமானால் அந்தப் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்டு தன்னைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளும்படியும் சொன்னார்.
நூலகரும் ஒப்புக் கொண்டு, அந்தப் புத்தகத்தில் இருந்து பல கேள்விகளைக் கேட்டார். எல்லாவற்றிற்கும் தெள்ளத் தெளிவாக பதில் கூறினார் சுவாமி விவேகானந்தர். நூலகருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுவாமிகள் ஒரு மிகப் பெரிய மேதை என்பதை ஒப்புக் கொண்ட அவர், எப்படி இது சாத்தியம் என்ற எதிர் வினாவையும் எழுப்பினார்.
அதற்கு சுவாமி விவேகானந்தர், “ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்தால், அவனால் எதுவும் முடியும். பிரம்மச்சரியத்தின் ஆற்றலுக்கு முன்னால் இதெல்லாம் சர்வ சாதாரணம்” என்றார் கம்பீரத்துடன் .
நூலகர் வியப்படைந்ததுடன், சுவாமிகளின் ஆற்றலை அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார்.  
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிதன்றோ?
*********

No comments:

Post a Comment