Chant the Maha Mantra:
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
கேள்வி: வேதவியாஸர் கிருஷ்ணனின் காலத்தில் வாழ்ந்தவர். ஆதலால் அந்த காலத்தில்தான் வேதம் நான்காக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ராமாயணத்தில் கூட வேதங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றனவே? எப்படி இது சாத்தியம்?
பதில்: பகவத்கீதையில் 18அத்தியாயங்கள் இருக்கின்றதென்று நமக்கு தெரியும். இப்பொழுது ஒருவர் அந்த பதினெட்டு அத்தியாயங்களை பிரித்து, பதினெட்டு தனித்தனி புத்தகங்களாக போடுகின்றார் என வைத்து கொள்வோம். அப்படி பதினெட்டாக பிரித்தபிறகு, அவை அனைத்தும் சேர்ந்த பகவத்கீதை எனும் மூலம் இல்லாமல் போய் விடுகிறது என்றா அர்த்தம்? அதுபோலவே நான்கு வேதங்களும் அனாதி காலமாக இருக்கின்றன. ரிக்வேதம், தேவர்களை யக்ஞங்களுக்கு அழைப்பதற்கான மந்திரங்களையும் பிரார்த்தனைகளையும் கொண்டது. ஸாம வேதம் என்பது, ரிக்வேதத்திற்கு ஒரு ராகம் அமைந்தது போன்றே ஆகும். யஜூர் வேதம் யக்ஞம் செய்வதற்கான வழிமுறை குறித்து விரிவாக பேசுகிறது. கலியில் வரும் ஜனங்களால் வேதம் முழுவதையும் கற்க இயலாது என்பதால், அதை நான்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பாகத்தை காப்பாற்றும் பொறுப்பை அளித்தார் வேதவியாசர். இப்படி செய்ததினால் நான்கும் சேர்ந்த வேதம் முன்னரே இல்லை என்று சொல்வது தவறு அல்லவா?
கேள்வி: எளிமையான பிரார்த்தனையின் மூலம் கடவுளை அடைய முடியும் என்று சொல்கின்றனர். அதே சமயம், சாதிரங்களும் உபாஸனா முறைகளும் கடவுள் சாதாரண மனிதனுக்கு மிக தூரத்தில் உள்ளார் என்கின்றனர்? இந்த முரண்பாடு ஏன்?
பதில்: பிரார்த்தனையை நம்பாதவர்களுக்காக அவை சொல்லப்பட்டு உள்ளன
பதில்: கருணையே வடிவான மஹரிஷிகள்
எந்த எந்த தவறு செய்தாயோ, அதற்கு தகுந்தாற்போல் பிராயச்சித்தங்கள் நிறைய சொல்லி இருக்கின்றார்கள். தாங்கள் நல்ல சாதிரம் படித்தவரை அணுகி, அதற்கான பிராயச்சித்தங்கள் செய்து கொள்ளலாம்.
கேள்வி: ஒரு தவறு நடந்திருக்குமோ அல்லது நடந்திருக்காதோ என்று சரியாக தெரியவில்லை. அப்படி இருக்கும்பொழுது நடந்து விட்டதாக நினைத்து பிராயச்சித்தம் செய்து கொள்ளலாமா?
பதில்: செய்து கொள்ளலாம். தவறு இல்லை. பிராயச்சித்தங்கள் தவறு நடந்திருந்தால் அதை போக்கி விடும். அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என்றால் நாம் செய்யும் பிராயச்சித்தங்கள் புண்யபலனாக மாறி விடும்.
கேள்வி: உலகத்தில் எது பாக்யம்?
பதில்: சிவ ரஹயம்.
கேள்வி: இதிஹாஸங்கள் இரண்டா மூன்றா?
பதில்: இதிஹாஸங்கள் மூன்று.
கேள்வி: ஏன் அதை பெரும்பாலும் பாராயணமோ அல்லது பிரவசனமோ செய்வதில்லை?
பதில்: அதில் சொல்லப்பட்டிருக்கின்ற பல விஷயங்களை, பரிபக்குவமில்லாதவர்கள் விபரீதமாக புரிந்துகொள்ள நேரிடும் என்பதாலேயே, பெரியவர்கள் இன்று வரையிலும் அதை பிரகாசப்படுத்தவில்லை
கேள்வி: பகவான் எங்கே இருக்கின்றான்?
பதில்: எங்கே ஒருவருடைய தலை பணிகின்றதோ, அங்குதான் இறைவன் உள்ளான்
கேள்வி: பக்தி கதைகளை தத்துவத்துடன் கேட்பது எதைப்போன்றது?
பதில்: ஒரு குழந்தையும், அந்த குழந்தையின் தந்தையும் சேர்ந்து நெய், முந்திரி பருப்பு, சர்க்கரை, பாதாம்பருப்பு இவற்றினால் கலந்து செய்யப்பட்ட பாதாம் அல்வாவை சுவைக்கின்றார்கள். அப்பொழுது இருவர் கைகளிலிருந்தும் சிறிது கீழே சிந்துகின்றது. தந்தையும் அதை பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொள்கின்றார். இவ்வளவு உயர்ந்த பொருள் வீணாகக்கூடாது என்ற காரணமும் அதில் அடங்கும். (நெய், முந்திரி, பாதாம் கலந்த அல்வா அல்லவா!) கீழே சிந்திய பாதாம் அல்வாவை, குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றது. நல்ல இனிப்பாயிருக்கின்றது என்ற ஒன்று மட்டும்தான் இதற்கு காரணம். அதுபோல், பகவானுடைய மஹிமை தெரிந்து பக்தி செய்பவர்களுக்கும், மஹிமை தெரியாமல் பக்தி செய்பவர்களுக்கும் அனுபவம் ஒன்றுதான். தத்துவம் தெரிந்தால் மஹிமை புரியும். மஹிமை தெரிந்தால் கௌரவம் அதிகரிக்கும். மஹிமை தெரியாமல் பக்தி செய்தால் ரஸம் அதிகரிக்கும்

SRI SRI MURALIDHARA SWAMIGAL
கேள்வி: எனக்கு சிறு வயது இருக்கையில், என் பாட்டி எனக்கு விளக்கேற்றும் பழக்கம் கற்று தந்தார். அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். மின்சார வசதி இல்லாததால்தான், அக்காலத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருந்தது என்பது என் எண்ணம். இது சரியா? அல்லது என் பாட்டி சொன்னதில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா?
பதில்: விளக்கேற்றுவதால் நமது பாபங்கள் அழிகின்றன. ஷீரடி பாபாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இதை நன்கு விளக்கும். முதலில் ஷீரடிக்கு அவர் வந்தபொழுது, வீடுவீடாகவும் கடைகளுக்கும் சென்று, ஒரு பாத்திரத்தில் எண்ணெயை யாஸித்து வந்தார். அந்த எண்ணெயை கொண்டு அவர் அருகிலுள்ள ஒரு மசூதியில் பல விளக்குகளை ஏற்றி வந்தார். சிலருக்கு இது ஏற்புடையதாக இல்லை; அவர்கள் தொல்லை தரவே, பலரும் எண்ணெய் தர மறுத்தனர். அதனால் ஷீரடி பாபாவிற்கு, எண்ணெய் கிடைக்காமல் போய் விட்டது. அதனால் அவர் தனது வாயிலிருந்தே நீரை உமிழ்ந்து அதைக் கொண்டு விளக்குகளை ஏற்றினார். இந்த அதிசயத்தை பார்க்க கூட்டம் கூடி விட்டது. அவர்களை பார்த்து அந்த ஷீரடி மஹாத்மா "நான் விளக்குகளை ஏற்றி உங்கள் பாவங்களைத்தான் போக்குகின்றேன். உங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையே!" என்றார். ஆதலால் விளக்கேற்றுவதை நிறுத்த வேண்டாம்.
கேள்வி: வேதவியாஸர் கிருஷ்ணனின் காலத்தில் வாழ்ந்தவர். ஆதலால் அந்த காலத்தில்தான் வேதம் நான்காக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ராமாயணத்தில் கூட வேதங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றனவே? எப்படி இது சாத்தியம்?
பதில்: பகவத்கீதையில் 18அத்தியாயங்கள் இருக்கின்றதென்று நமக்கு தெரியும். இப்பொழுது ஒருவர் அந்த பதினெட்டு அத்தியாயங்களை பிரித்து, பதினெட்டு தனித்தனி புத்தகங்களாக போடுகின்றார் என வைத்து கொள்வோம். அப்படி பதினெட்டாக பிரித்தபிறகு, அவை அனைத்தும் சேர்ந்த பகவத்கீதை எனும் மூலம் இல்லாமல் போய் விடுகிறது என்றா அர்த்தம்? அதுபோலவே நான்கு வேதங்களும் அனாதி காலமாக இருக்கின்றன. ரிக்வேதம், தேவர்களை யக்ஞங்களுக்கு அழைப்பதற்கான மந்திரங்களையும் பிரார்த்தனைகளையும் கொண்டது. ஸாம வேதம் என்பது, ரிக்வேதத்திற்கு ஒரு ராகம் அமைந்தது போன்றே ஆகும். யஜூர் வேதம் யக்ஞம் செய்வதற்கான வழிமுறை குறித்து விரிவாக பேசுகிறது. கலியில் வரும் ஜனங்களால் வேதம் முழுவதையும் கற்க இயலாது என்பதால், அதை நான்காக பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பாகத்தை காப்பாற்றும் பொறுப்பை அளித்தார் வேதவியாசர். இப்படி செய்ததினால் நான்கும் சேர்ந்த வேதம் முன்னரே இல்லை என்று சொல்வது தவறு அல்லவா?
கேள்வி: எளிமையான பிரார்த்தனையின் மூலம் கடவுளை அடைய முடியும் என்று சொல்கின்றனர். அதே சமயம், சாதிரங்களும் உபாஸனா முறைகளும் கடவுள் சாதாரண மனிதனுக்கு மிக தூரத்தில் உள்ளார் என்கின்றனர்? இந்த முரண்பாடு ஏன்?
பதில்: பிரார்த்தனையை நம்பாதவர்களுக்காக அவை சொல்லப்பட்டு உள்ளன
கேள்வி: நான் ஏதோ அறியாமல் சில தவறுகள் செய்து விட்டேன். அதை நினைத்து நினைத்து என் மனது என்னை உறுத்திக்கொண்டே இருக்கின்றது. நான் என்ன செய்யலாம்?
பதில்: கருணையே வடிவான மஹரிஷிகள்
எந்த எந்த தவறு செய்தாயோ, அதற்கு தகுந்தாற்போல் பிராயச்சித்தங்கள் நிறைய சொல்லி இருக்கின்றார்கள். தாங்கள் நல்ல சாதிரம் படித்தவரை அணுகி, அதற்கான பிராயச்சித்தங்கள் செய்து கொள்ளலாம்.
கேள்வி: ஒரு தவறு நடந்திருக்குமோ அல்லது நடந்திருக்காதோ என்று சரியாக தெரியவில்லை. அப்படி இருக்கும்பொழுது நடந்து விட்டதாக நினைத்து பிராயச்சித்தம் செய்து கொள்ளலாமா?
பதில்: செய்து கொள்ளலாம். தவறு இல்லை. பிராயச்சித்தங்கள் தவறு நடந்திருந்தால் அதை போக்கி விடும். அப்படி எதுவும் தவறு நடக்கவில்லை என்றால் நாம் செய்யும் பிராயச்சித்தங்கள் புண்யபலனாக மாறி விடும்.
கேள்வி: உலகத்தில் எது பாக்யம்?
பதில்: சிவ ரஹயம்.
கேள்வி: இதிஹாஸங்கள் இரண்டா மூன்றா?
பதில்: இதிஹாஸங்கள் மூன்று.
கேள்வி: ஏன் அதை பெரும்பாலும் பாராயணமோ அல்லது பிரவசனமோ செய்வதில்லை?
பதில்: அதில் சொல்லப்பட்டிருக்கின்ற பல விஷயங்களை, பரிபக்குவமில்லாதவர்கள் விபரீதமாக புரிந்துகொள்ள நேரிடும் என்பதாலேயே, பெரியவர்கள் இன்று வரையிலும் அதை பிரகாசப்படுத்தவில்லை
கேள்வி: பகவான் எங்கே இருக்கின்றான்?
பதில்: எங்கே ஒருவருடைய தலை பணிகின்றதோ, அங்குதான் இறைவன் உள்ளான்
கேள்வி: பக்தி கதைகளை தத்துவத்துடன் கேட்பது எதைப்போன்றது?
பதில்: ஒரு குழந்தையும், அந்த குழந்தையின் தந்தையும் சேர்ந்து நெய், முந்திரி பருப்பு, சர்க்கரை, பாதாம்பருப்பு இவற்றினால் கலந்து செய்யப்பட்ட பாதாம் அல்வாவை சுவைக்கின்றார்கள். அப்பொழுது இருவர் கைகளிலிருந்தும் சிறிது கீழே சிந்துகின்றது. தந்தையும் அதை பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொள்கின்றார். இவ்வளவு உயர்ந்த பொருள் வீணாகக்கூடாது என்ற காரணமும் அதில் அடங்கும். (நெய், முந்திரி, பாதாம் கலந்த அல்வா அல்லவா!) கீழே சிந்திய பாதாம் அல்வாவை, குழந்தையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றது. நல்ல இனிப்பாயிருக்கின்றது என்ற ஒன்று மட்டும்தான் இதற்கு காரணம். அதுபோல், பகவானுடைய மஹிமை தெரிந்து பக்தி செய்பவர்களுக்கும், மஹிமை தெரியாமல் பக்தி செய்பவர்களுக்கும் அனுபவம் ஒன்றுதான். தத்துவம் தெரிந்தால் மஹிமை புரியும். மஹிமை தெரிந்தால் கௌரவம் அதிகரிக்கும். மஹிமை தெரியாமல் பக்தி செய்தால் ரஸம் அதிகரிக்கும்
கேள்வி: உலகத்தில் எது பாக்யம்?
பதில்: பணத்தை அடைவதோ, புகழை அடைவதோ, பெரிய பதவியை அடைவதோ, வித்வத்தை அடைவதோ, பல பட்டங்களை பெறுவதோ, அழகை அடைவதோ, நீண்ட நாட்கள் வாழ்வதோ இவைகளில் எதை அடைந்தாலும் அவன் பாக்யவான் அல்ல. எவன் ஒருவன் தான் திரும்பி பிறக்காததற்கான வழியை தேடிக்கொள்கிறானோ அவனே பாக்கியவான்.
-----------------------------------------------------------------
Chant the Maha Mantra:
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
-----------------------------------------------------------------
Chant the Maha Mantra:
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
No comments:
Post a Comment